தென்னிந்திய சினிமாவில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் யஷ் நடித்துள்ள KGf 2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை தான் நடந்து வருகிறது. இதில் யஷ் KGf 2 படம் படு மாஸாக எல்லா இடங்களிலும் பெரிய அளவில் வசூலிக்கின்றன.

சென்னை வசூல்

சென்னையில் விஜய்யின் பீஸ்ட் படம் தான் நல்ல வசூல் செய்யும் என்று பார்த்தால் படம் விமர்சனங்களால் கொஞ்சம் பின்தங்க Kgf 2 கெத்து காட்டுகிறது.

பீஸ்ட் திரையிடப்படும் திரையரங்குகள் எண்ணிக்கை குறைய Kgf 2விற்கு திரையரங்குகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

படத்தின் முழு வசூல் விவரம்

சென்னையில் 6 நாள் முடிவில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெறும் ரூ. 36 லட்சம் வசூலிக்க Kgf 2 5வது நாளில் சென்னையில் ரூ. 62 லட்சம் வசூலித்துள்ளது.

மொத்தமாக Kgf 2 சென்னையில் ரூ. 3.61 கோடி வசூலித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here