சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பில் தென்னிந்திய நடிகர் அருண் விஜய் அவரின் மகன் ஆர்னவ் விஜய் மற்றும் அருண் விஜயின் தந்தை விஜயகுமார் என மூன்று தலைமுறை இணைந்து நடிக்கும் திரைப்படம் ஓ மை டோக்.

செல்லப்பிராணியான நாய்க்கும் சிறுவனுக்கும் இடையில் நடக்கும் பாசப்பிணைப்பை பற்றிய படமாக இது இருக்கலாம்  என எதிர்பாக்கப்படும் நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறவிருக்கும் It’s my kinda day என்ற பாடல் அண்மையில் யூ டியூப்பில் வெளியாகி இலட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வெற்றி நடை போடுகிறது.

சூப்பர் சுப்பு வரிகளை எழுத, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்பாடலை எமது  ஐபிசி தமிழின் தங்கத்தமிழ் குரல் இறுதிப்போட்டியாளர் அஜீஸ் சிவகுமார் பாடியுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் கனேடிய போட்டியாளர்களை உள்ளடக்கியதாக இடப்பெற்ற ஐபிசி தமிழின் சிறுவர்களுக்கான தங்கத்தமிழ் குரல் போட்டியில் பங்குபற்றியிருந்த அஜீஸ் அதன் இறுதிப்போட்டி வரை முன்னேறி குறித்த மேடையில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாராட்டைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னணிப் பாடகனாக உருவெடுத்திருப்பது மகிழ்வைத்தருவதாக குறிப்பிடும் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் சிறுவனான அஜீஸ் தனது பெற்றோரின் ஒத்துழைப்புடன் இன்னும் பல பாடல்களை பாட விரும்புவதாகவும் தெரிவித்துளளார்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here