விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரித்திகா.
ராஜா ராணி சீரியலுக்கு பின் இவருக்கு, குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் ரித்திகாவிற்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.
இதன்பின் தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
புதிய கார்
இந்நிலையில், தனது ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் புதிய கார் வாங்கியுள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட இந்த அழகிய புகைப்படத்தை நடிகை ரித்திகா சந்தோஷத்துடன் அவர் பதிவு செய்துள்ளார்.
இதற்காக ரசிகர்கள் பலரும், ரித்திகாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.