நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட்.
விஜய்யின் 65வது படமான பீஸ்ட்டை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். ஆனால் ரிலீஸ் பிறகு அந்த கொண்டாட்டம் பெரிய அளவில் நீடிக்கவில்லை, காரணம் படத்திற்கு வந்த மோசமான விமர்சனங்கள் தான்.
ஆனால் படம் 3வது நாளிலும் வசூல் வேட்டை நடத்துகிறது என்றால் அது விஜய் என்ற ஒருவரின் பெயரால் மட்டுமே தான், அனைவருக்கும் இது தெரியும்.
பீஸ்ட் KGF 2 படத்தின் வசூல்
சென்னையில் பல முக்கிய திரையரங்குகளில் பீஸ்ட் படத்திற்கு பதிலாக KGF 2 படத்தை திரையிட்டு வருகிறார்கள். எனவே நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக பீஸ்ட் படத்திற்கு வசூல் குறைய தொடங்கிவிட்டது.
தற்போது 3வது நாளில் சென்னையில் பீஸ்ட் திரைப்படம் ரூ. 1.41 கோடி வசூலித்துள்ளதாம். 3 நாட்களை சேர்த்து படம் ரூ. 4.98 கோடி வசூலித்திருக்கிறது.
அதேபோல் Kgf 2 படம் நேற்று சென்னையில் ரூ. 74 லட்சம் வசூலிக்க 2 நாள் முடிவில் படம் ரூ. 1.42 கோடி வரை வசூலித்திருக்கிறது.