தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சீரியல்கள் தான் அதிகம் வரவேற்பு பெறுகின்றன. அதிலும் இந்த கொரோனா காலத்தில் இருந்து பலரும் தொலைக்காட்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்.

இதனால் எல்லா தொலைக்காட்சிகளிலும் தொடர்கள் அதிகம் வருகின்றன, பழைய சீரியல்களை அதாவது சரியாக ஓடாத தொடர்களை அப்படியே பல தொலைக்காட்சிகள் நிறுத்திவிடுகிறார்கள்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் வைதேகி காத்திருந்தாள் என்ற தொடர் ஆரம்பித்த சில வாரங்களிலேயே நிறுத்தப்பட்டது, காரணம் சரியான TRP இல்லையாம்.

சரண்யாவின் அடுத்த தொடர்

நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அதற்பின் ஆயுத எழுத்து தொடர் நடித்து வந்தார். இந்த தொடர் சில காரணங்களால் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

அதன்பிறகு வைதேகி காத்திருந்தாள் தொடங்கப்பட்டது, ஆனால் தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டது.

இப்போது சரண்யா புதிய தொடர் ஒன்று கமிட்டாகியுள்ளார், இந்த தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

மற்றபடி தொடர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here