விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது. ரசிகர்களும் கொண்டாட தொடங்கிவிட்டனர், இனிமேல் விஜய்யின் பீஸ்ட் வசூல் மழை பொழிய இருக்கிறது.
படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக தான் வருகின்றன, விஜய் ரசிகர்கள் பிளாக் பஸ்டர் என்று கூற மற்ற சினிமா ரசிகர்கள் சாதாரண ஒரு படம் தான் என்கின்றனர்.
சிலர் நெல்சன் தனது கிடைத்த பெரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் என்கின்றனர், எதுஎப்படியோ விஜய் என்ற பெயருக்காகவே படம் கண்டிப்பாக ஓடிவிடும்.
படத்தில் விஜய்யின் நடனம் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது, அதேபோல் தளபதி கூறிய சில வசனங்கள் திரையரங்கில் கைத்தட்டல்களை பெற்றுள்ளன.
அப்படி அவர் போக்கிரி படத்தில் இடம்பெற்ற ஒருதடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் வசனத்திற்கும், ஹிந்தி மொழி பற்றி ஒரு வசனமும் இருந்தது.
உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா,எல்லா தடவையும் ஹிந்தியை Translate பண்ணிட்டு இருக்க முடியாது என்ற வசனத்திற்கு எல்லா இடத்திலும் ரசிகர்களின் கைத்தட்டல்களால் வரவேற்கப்பட்டது.