விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தயாரிப்பு குழு அறிவித்தது போல் இன்று வெளியாகிவிட்டது. வெளிநாடு முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எல்லா இடங்களிலும் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு.
ஆனால் சென்னையில் கரூர் போன்ற சில இடங்களில் படம் ரிலீஸ் ஆகவில்லை என்ற செய்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது.
தற்போது படத்தின் FDFS காட்சிகள் படு கொண்டாட்டமாக முடிந்துள்ளது, அடுத்தடுத்த காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் வசூலில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் பீஸ்ட் திரைப்படம் எத்தனை திரையில் ஒளிபரப்பாகிறது என்ற விவரம் வந்துள்ளது.
அதன்படி சென்னையில் 23 திரையரங்குகளின், 71 திரைகளில், 313 காட்சிகள் போடப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு பகுதிகளில் 86 திரையரங்குகளின், 224 திரைகளில், 1184 காட்சிகள் போடப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் சேர்ந்து இன்று மட்டும் 109 திரையரங்குகளில், 295 திரைகளில், 1497 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளதாம்.