என்ட்ரி கொடுக்கும் சிம்பு பட நடிகை

ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட், கமலுக்கு பதிலாக தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே இந்த இறுதி வரை தாக்கு பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களான ஜூலி மற்றும் அபிராமி இருவரும் பாதியிலே வெளியேறினர்.

இந்நிலையில் இறுதிப் போட்டியை இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ள பிக்பாஸ் அல்டிமேட் குழு, சர்பிரைஸாக நடிகை ஹன்ஷிகாவை இறுதிபோட்டிக்கு வரவழைக்க உள்ளனர்.

ஆம், ஹன்சிகா மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காகவே ஹன்சிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தனர், ஆனால் சில காரணங்களால் இருவரும் பிறகு பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here