விரைவில் வெளியாகும் பீஸ்ட்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் பல்வேறு ஷோஸ் திரையிடவுள்ளனர்.

அதற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து பீஸ்ட் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் இதற்கும் முன் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.

போலீஸ் விதித்த தடை

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அதிர்ச்சியாகும் படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. நெல்லையில் மிகவும் பிரபலமான திரையரங்க உள்ளது ராம் சினிமாஸ்.

அங்கு ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் ரிலீஸின் போது வாகனங்களை நிறுத்தக்கூடாது, பேனர்கள் வைக்க கூடாது, சென்டா மேளம், இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியில்லை என்றும், அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here