தளபதி 66

பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 66. இப்படத்தை வம்சி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

 

 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இரு நாட்களுக்கு முன் துவங்கியது. தளபதி 66ல் முக்கிய கதாபாத்திரத்தில் சரத் குமார் நடிக்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்திற்காக தமிழில் வசனம் எழுத முதன் முதலில் இயக்குனர் ராஜூமுருகன் கமிட்டாகி இருந்தார்.

விலகிய இயக்குனர்

இந்நிலையில், தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்தை ராஜூமுருகன் இயக்கவுள்ளதனால், தளபதி 66 படத்தில் இருந்து விலகிவிட்டாராம் ராஜூமுருகன்.

அவருக்கு பதில் பிரபல முன்னணி பாடலாசிரியர் விவேக் கமிட்டாகியுள்ளார். பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டதை கூட நாம் பார்த்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here