நடிகர் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது, ஆனால் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் படு கோலாகலமாக முடிந்துவிட்டது.

அவரது வலிமை படத்தை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடி வெற்றிப்படமாக ஆக்கிவிட்டார்கள்.

முடிவுக்கு வந்த வசூல்

அஜித்தின் வலிமை படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்தார்கள்.

கதை கொஞ்சம் டல் அடித்தாலும் அஜித்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முதல் நாள் வசூல் எல்லாம் அதிகமாக தான் இருந்தது.

வலிமை படம் ரிலீஸ் ஆகி 43 நாட்களை கடந்துள்ளது, ஆனால் படம் எங்கோ சில இடங்களில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது படத்தின் வசூல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்படங்கள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here