ரகுமானின் மாஸ் பதிவு
உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்து நாடுமுழுவதும் பல்வேறு கண்டங்களுக்கும், எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் அவரின் சமூக வலைதள பக்கங்களிலில் ழகரத்தை ஏந்தியுள்ள புரட்சி பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
மேலும் அந்த புகைப்படத்தில் பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவை ரசிகர்கள் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலே ரகுமான் இந்த மாஸ் செயலை செய்துள்ளார் என கூறிவருகின்றனர்.