பீஸ்ட் படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங். விஜய் உளவுத்துறை ஏஜெண்டாக நடித்திருக்கும் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மறுபுறம் ட்ரைலர் கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. அதில் இருக்கும் காட்சிகள் பற்றி பல விதமான ட்ரோல்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன. விக்ரம் பட சண்டை காட்சி போலவே பீஸ்ட் படத்திலும் இருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பீஸ்ட்டில் விஜய் ஃபைட்டர் ஜெட் ஓட்டுவது போல வரும் காட்சியில் விஜய் ஆக்சிஜன் மாஸ்க், ஹெல்மெட் என எதுவுமே இல்லாமல் வெறும் ஹெட்செட் மட்டுமே அணிந்து இருக்கிறார். இது என்ன லாஜிக் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது பற்றி பெரிய விவாதமே தற்போது நடைபெற்று வருகிறது.