நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் ஆக்டீவாக எதையாவது செய்துகொண்டே இருக்கக்கூடிய ஒரு பிரபலம்.
கடைசியாக இவரது நடிப்பில் லாபம் திரைப்படம் வெளியாகி இருந்தது, அதன்பின் எந்த படமும் இல்லை. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இவர் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை பதிவிட்ட வண்ணம் இருந்தார்.
கொரோனாவில் அவர் செய்த விஷயங்கள்
கொரோனாவின் போது நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு தானே வித்தியாசமான போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி வெளியிட அது பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. சில நேரங்களில் சமையல் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
ரசிகரின் மோசமான கேள்வி
இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் அண்மையில் கலந்துரையாடினார் நடிகை ஸ்ருதிஹாசன். அப்போது ஒரு ரசிகர் உடம்பில் எந்தெந்த பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு முதலில் ஸ்ருதிஹாசன், இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என கூற பின் மூக்கில் செய்ததாக பதிவு செய்துள்ளார்.