தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பு குறித்து அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அந்த வகையில் ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் பெரியளவில் பார்வைகளை குவித்து ஹிட்டாகியுள்ளது.
மேலும் எல்லோரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து வந்தனர், அதன்படி சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வரும் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய புகைப்படம்
இந்நிலையில் ட்ரைலருக்கு உள்ள எதிர்பார்ப்பிற்கு இடையே அனிருத் நாளை வெளியாகும் ட்ரைலருக்கு தயாராக இருங்கள் என பதிவிட்டு இருந்தார்.
இதனிடையே சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் Exclusive புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் உள்ளார்.
இதுவரை வெளியான பாடல்கள் மற்றும் புகைப்படங்களில் நடிகர் யோகி பாபுவை காட்டவில்லை. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் அவர் ஒருவழியாக காண்பித்துள்ளார்.
வலிமை படம் நஷ்டமா? லாபமா? முதல் முறையாக உண்மையை கூறிய விநியோகஸ்தர்