தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கருப்பு மாஸ்க் அணிந்தும் சிகப்பு காரில் வந்த தகவல் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சைக்கிளில் வந்த நடிகர் விஜய் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போதே விஜய் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டனம் தெரிவிப்பது போல் உள்ளது அவர் சைக்கிளில் வந்தது எனக்கூறப்பட்டது.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்ததில் சாதாரண மாருதி சிகப்பு காரில் வந்து வாக்கிளித்தார். இதைப்பற்றிய புகைப்படங்களும், கருத்துகளும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வைரலாகி வந்தன.
மேலும், நடிகர் விஜய் வாக்களிக்க வந்த சிகப்பு காருக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படவில்லை என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது. ஜோசப் விஜய் சி என்ற பெயரில் வாங்கப்பட்ட மாருதி சுசுகி செலிரியோ கார் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பின் 2020 மே 26-ம் தேதியுடன் அந்த காருக்கான இன்சூரன்ஸ் முடிவடைந்து உள்ளதாகவும் இன்சுரன்ஸ் இல்லாத காரை ஓட்டி வந்த நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி அவர் கருப்பு நிற மாஸ்கை அணிந்து வந்ததால் அதற்கு அரசியல் குறியீடு உள்ளது என சிலர் கருத்துக்களை பதிவிட தொடங்கி இருக்கின்றனர்.