தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

அப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று சமந்தா அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி அதனை பதிவிட்டு இருந்து உடனடி வைரலான அவரின் வீடியோவை, நடிகை பூஜா ஹெக்டேவும் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ‘Amaze’ என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த இரு நடிகைகள் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

ஆம் அதற்கு காரணமே முன்பு நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு “I don’t find her pretty at all” என பதிவிட்டு இருந்தார்.

அவர் அப்படி பதிவிட்டதை தொடர்ந்து இணையத்தில் இருதரப்பு ரசிகர்களும் எதிர்மறையாக பதிவிட்டு வந்தனர். அதன்பின் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கம் Hack செய்யப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த விவாகரத்திற்கு பிறகு தற்போது தான் நடிகை பூஜா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா குறித்து பதிவிட்டுள்ளார்.

Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here