நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.

வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் உலகளவில் ஆங்காங்கே தொடங்கியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் ஓரிரு தினங்களில் வலிமை படத்திற்கான முன்பதிவு தொடங்கும் எனத் தெரிகிறது.

இதனிடையே பிரான்ஸ் நாட்டில் சில இடங்களில் வலிமை படத்தின் முதல் காட்சி இருக்கும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது அந்த காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் பிரான்ஸில் இருக்கும் அஜித் ரசிகர்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here