விஷ்ணு விஷால் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ள திரைப்படம் FIR. மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் தயாரிப்பில் உருவான இப்படத்தை, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. மாறுபட்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ள விஷ்ணு விஷாலின் மீதும், FIR படத்தின் மீதும் மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் FIR திரைப்படம் முழுமை செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

IIT-ல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடி வரும் விஷ்ணு விஷால் [இபார்ன் அக்மத்], நாள்தோறும் பல கம்பெனிகளில் நேர்காணலை சந்தித்து வருகிறார். ஆனால், போகும் இடம்மெல்லாம், தான் ஒரு முஸ்லீம் என்பதினால் நிராகரிக்க போடும் விஷ்ணு விஷலுக்கு, தன்னை எங்கும் சென்றுலும் இஸ்லாமியராக, தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நபர்கள் மீதி கோபம் ஏற்படுகிறது.

மற்றொரு புறம், இந்திய நாட்டை சீர்குலைக்கும் விதமாக, வெடிகுண்டு மிரட்டல்களை விடுகிறார், அபூபக்கர் அப்துல்லா. தீவிரவாத இனத்தை சேர்ந்த இவர், தொடர்ந்து பல வன்முறையில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவில் தீவீரமாக தேடப்பட்டு வரும் அபூபக்கர் அப்துல்லாவை NIA உள்ளிட்ட பல இந்திய காவல் துறையை சேர்ந்த பலரும், தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், தீடீரென எதிர்பாராமல் நடக்கும் பல சம்பவங்கள், விஷ்ணு விஷாலின் பக்கம் எதிராக திரும்ப, விஷ்ணு விஷால் தான் அபூபக்கர் அப்துல்லா என்று NIA முடிவுசெய்து அவரை கைது செய்கிறார்கள். இதிலிருந்து விஷ்ணு விஷால் தன்னை காப்பாற்றி கொண்டாரா..? இல்லையா..? யார் அந்த அபூபக்கர் அப்துல்லா..? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் விஷ்ணு விஷால் தனது நடிப்பில் மிரட்டியெடுக்கிறார். ஆக்ஷன், அம்மா செண்டிமெண்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். NIA அதிகாரியாக வரும் கவுதம் மேனன், கதாபாத்திரத்துடன் ஒன்றி போகிறார். மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் இருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார்கள். ரெபா மோனிகா ஜானுக்கு பெரிதும் ஸ்கிரீன் ஸ்பேஸ் இல்லை.

விஷ்ணு விஷுலின் அம்மாவாக நடித்துள்ள நடிகை பார்வதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். NIA-வில் துணை அதிகாரியாக வருபவர் கவனத்தை பெறுகிறார். குறிப்பாக படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை அபூபக்கர் அப்துல்லாவை பிடிக்க, அவர் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இயக்குனர் மனு ஆனந்தின் கதைக்களம் சூப்பர். ஆனால், திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தி இருக்கலாம்.

மெதுவாக செல்லும், திரைக்கதையால் படத்தின் மீது சலிப்பு ஏற்படுகிறது. இந்திய நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற, எந்த ஒரு சாதி, மதம் பார்க்காமல், எந்த ஒரு அரசு அங்கீகாரமும் இல்லாமல், ஒரு இஸ்லாமியர் நாட்டுக்காக பணிபுரிகிறார். ஆனால், இஸ்லாமிய சகோதரர்களை இன்னமும் திவரவாத எண்ணத்தில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று, தான் கூறவந்த விஷத்தை தெளிவாக எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த். அருள் வின்சன்ட் ஒளிப்பதிவு, ஜி.கே. பிரசன்னாவின் எடிட்டிங் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அஷ்வத்தின் இசை ஓகே.

க்ளாப்ஸ்

விஷ்ணு விஷால் நடிப்பு

கதைக்களம்

பல்ப்ஸ்

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருக்கலாம்.

மொத்தத்தில் FIR நடைமுறையில் நடக்கும் பிரச்சனையை தைரியமாக சொன்னதற்காகவே பார்க்க வேண்டிய படம்

2.75 / 5

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here