கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி இருந்த புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மீண்டும் புதிய ஆந்தாலஜி திரைப்படமாக புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குநர்கள் ரிச்சார்ட் ஆன்டனி, பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா மற்றும் சூரிய கிருஷ்ணா ஆகியோர் 5 வெவ்வேறு கதை களங்களில் உருவாக்கி உள்ளனர்.

இதில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் தாஸ், நதியா, லிஜோமோல் ஜோஸ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌரி கிஷன், மணிகண்டன், விஜி சந்திரசேகரன், டிஜே அருணாச்சலம், முன்னணி ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், சனந்த், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14ஆம் திகதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here