விஜய் தொலைக்காட்சியில் மிக விரைவில் பிக்பாஸ் 5வது சீசன் தொடங்கவுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் பயங்கரமாக நடந்து வருகிறது.

அண்மையில் 5வது சீசனிற்கான லோகோவை வெளியிட்டவர்கள் நிகழ்ச்சிக்கான 2 புரொமோக்களை வெளியிட்டு விட்டார்கள்.

வரும நாட்களில் நிகழ்ச்சிக்கான சில புதிய புரொமோக்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் தான் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தீபாவையும் பிக்பாஸ் குழுவினர் அழைத்துள்ளனர். ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் என்று கூட கூறியுள்ளனர்.

ஆனால் இந்த வாய்ப்பு வேண்டாம் என உறுதியாக கூறியுள்ளார் தீபா. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க கேட்டும் வேண்டாம் என்று கூறினேன்.

பணத்தை விட சுயமரியாதை முக்கியம் என்று தான் நினைத்து அங்கு செல்லவில்லை. நான் அன்புக்குத்தான் அடிமை என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here