தாடி பாலாஜி தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர். காமெடி நடிகராக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார்.
இப்போதும் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அதிகம் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
அண்மையில் அவர் BMW கார் ஒன்றை வாங்க அந்த காரின் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அனைவருக்கும் அவருக்கு வாழ்த்தும் கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் தாடி பாலாஜி விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாக தகவல் வர ரசிகர்கள் அனைவரும் பதறிப் போனார்கள்.
ஆனால் ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி விபத்தில் எதுவும் சிக்கவில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.