சீரியல் நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்தார்.

அந்த சீரியலை சிலர் அவருக்காகவே பார்த்தார்கள் என்றே கூறலாம். அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சித்ரா சொந்த பிரச்சனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது ரசிகர்கள் இது தற்கொலை இல்லை கொலை போல் தெரிகிறது சித்ரா மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இன்ஸ்டாவில் அவரது ரசிகர்கள் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சித்ரா நடிப்பில் முத்ன்முறையாக வெளியான கால்ஸ் திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதாக கூறியிருந்தோம.

கால்ஸ் திரைப்படம் வரும் ஞாயிறு அன்று மாலை 3.30 மணியளவில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here