சன் டிவியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சின்னத்திரையிலும் TRP-யில் முதன்மையில் இருக்கும் சீரியல், ரோஜா.
ஓரிரு வாரங்கள் TRPயில் பின்னடைவில் இருந்தாலும், பல வாரங்களாக, பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் நம்பர் 1 இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்துள்ளது.
இந்த ரோஜா சீரியலில், சிப்பு சூர்யன் என்பவர் கதாநாயகனாக நடிக்க, பிரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியலில், பிரபல நடிகை நளினி என்ட்ரி கொடுக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த வாரம், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கும் ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கிறார் நளினி.
இதோ படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம்..