சின்னத்திரையில் கலக்கும் பலர் விஜய் தொலைக்காட்சியில் தங்களது பயணத்தை தொடங்கியவர்களாக இருக்கிறார்கள்.
அப்படி பெரிய லிஸ்ட் போட்டு சொல்லக்கூடியவர்களில் ஜாக்குலினும் ஒருவர். இந்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டவராக மாறினார்.
தொகுப்பாளினி பயணம் போய்க் கொண்டிருக்கும் போதே தேன்மொழி BABL என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்தார். நன்றாக தான் சீரியல் ஓடியது, ஆனால் இடையில் கொரோனா, சில பிரபலங்களின் மாற்றம், நேரம் மாற்றம் என நடக்க சீரியல் இருக்கிறதா இல்லையா என்ற ரேஞ்சில் உள்ளது.
இந்த நேரத்தில் தான் தொகுப்பாளினி ஜாக்குலின் ஒரு சூப்பரான புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதாவது அவர் புதியதாக கார் வாங்கியுள்ளாராம், அப்புகைப்படத்தை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
https://www.instagram.com/p/CTgV3eWJxR9/?utm_source=ig_embed&ig_rid=145c4ef7-022c-4f6d-b614-1747c5cc7983