தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு வெளியான மிக பெரிய நட்சத்திரத்தின் திரைப்படம் மாஸ்டர் தான், மேலும் இப்படம் தான் மீண்டும் திரையரங்கிற்கு மக்களை அதிகளவில் வரவழைத்தது.
இந்நிலையில் பிளாக் பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மாஸ்டர் திரைப்படம் இந்தியளவில் 154 கோடி வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது.
மேலும் இதுவரை 2021-ல் வெளியான திரைப்படங்களில் எந்தஒரு திரைப்படமும் இந்த வசூலை பெறவில்லை எனவும் மாஸ்டர் தான் அதிக வசூல் புரிந்த திரைப்படமாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.