இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறப்பு தளங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் தற்போது கார்த்தி, ரகுமான், திரிஷா இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் அமைந்துள்ளது. அங்கு சிலைகளின் நடுவில் திரிஷா காலில் செருப்பு அணிந்து நடித்ததாக கூறப்படுகிறது.
இது சிவலிங்ககங்களையும், இந்துக்களையும் அவமானப்படுத்துவதால், நடிகை திரிஷா மீதும் இயக்குனர் மணிரத்னம் மீதும் போலீஸில் ஒரு அமைப்பு சார்ந்த நபர்கள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.