இந்திய அளவில் பெண்களுக்கான உரிமைகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருகிறது.
ஒருசில பெண்கள் பல கஷ்டங்களுக்கு பிறகே தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அப்படி படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றி பேசும் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது காற்றுக்கென்ன வேலி.
விஜய்யில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள். இதில் நமக்கு நன்கு பரீட்சயப்பட்ட நடிகை மாளவிகா, சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தற்போது சீரியலில் அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க கமிட்டாகியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்படும் சாரதா வேடத்தில் மாளவிகா ஏன் நடிப்பதை நிறுத்தினார் என்பது தெரியவில்லை.