தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித் இருவரின் ரசிகர்கள் தான் மாறி மாறி சாதனை படைப்பார்கள். அதிலும் யுடியுப், டுவிட்டர் ட்ரெண்ட் என்று வந்தால் போட்டி போட்டு ரெக்கார்ட் வைப்பார்கள்.
ஆனால், சத்தமே இல்லாமல் யுடியுப்-ல் தற்போது ஜோதிகா மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார், ஆம், ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சஸி படம் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
யு-டியுப் பொறுத்தவரை தமிழ் படங்களின் ஹிந்தி டப்பிங்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகின்றது, அந்த வகையில் விஜய், அஜித் படங்கள் பலவற்றை ஹிந்தி டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
அதுவும் நல்ல ஹிட்ஸ் போகும், இதுவரை விஜய், அஜித் படங்களின் ஹிந்தி டப்பிங் எதுவுமே 200 மில்லியனை தொட்டது இல்லை.
தற்போது ஜோதிகாவின் ராட்சஸி திரைப்படம் 200 மில்லியன் ஹிட்ஸ் சென்றது மட்டுமில்லாமல், 2 மில்லியன் லைக்ஸ் வந்து சாதனை படைத்துள்ளது.