அட்லீ இன்று இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். ஆம், இந்திய சினிமா என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் இவர் தற்போது எடுத்துக்கொண்டு இருக்கும் படத்தின் நாயகன் ஷாருக்கான், அட்லீ தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார்.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, காமெடி நடிகர் யோகிபாபுவும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியே ஒரு மெட்ரோ ட்ரெயினை கடத்துவது போல் தான் எடுத்து வருகின்றார்களாம்.
கண்டிப்பாக அட்லீ படம் என்றாலே பிரமாண்டம் நிரம்பி இருக்கும், அப்படி ஒரு பிரமாண்ட காட்சியாக தான் இதுவும் இருக்கும் என்றே தெரிகின்றது.