தமிழ், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் உருவான பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கவிதா.11வயதில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த இவர், குழந்தை நட்சத்திரம், கதாநாயகி, கௌவரவ வேடம், அம்மா என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் கவிதா.நாடுமுழுவதும் மக்களை கொன்றுகுவித்து வரும் கொரோனா தொற்று, கவிதாவின் மகன் மற்றும் கணவருக்கு வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் கடந்த ஜூன் 16ஆம் தேதி கவிதாவின் மகன் மரணமடைந்துள்ளார். இந்த துயரமே இன்னும் நீங்காத நிலையில் தற்போது கவிதாவின் கணவரும் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ளார் என செய்து வெளிவந்துள்ளது.இறங்களுடன் இவரது துயரத்திற்கு திரையுலகினர் ஆறுதலையும் கூறிவருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here