பாபுசிவன் இயக்கத்தில் விஜய்-அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டைக்காரன். போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என நினைக்கும் விஜய், அதற்கு இடையில் பிரச்சனையில் சிக்க பின் அதில் இருந்து அவர் மீண்டு தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்.இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக இரண்டாம் பாதியில் இருக்கும்.படத்தில் கரிகாலன் கால போல என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. இதில் விஜய் பாதி பெண், பாதி ஆண் என்று ஒரு வேடம் போட்டிருப்பார். அந்த வேடம் போட டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தான் கூறியிருக்கிறார்.அவருக்கு இந்த எண்ணம் வர காரணமே பாலிவுட் நடிகர் அமீர்கான் தானாம். அவர் Tata Sky விளம்பரத்தில் பாதி ஆண், பாதி பெண் வேடம் போட்டு நடித்திருந்தார், அதைப்பார்த்து தான் டான்ஸ் மாஸ்டர் தினேஷிற்கு இப்படி ஒரு ஐடியா வந்ததாம்.