முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, சீயான் 60 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இதில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா, நீண்ட நாட்களாகவே படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை.

இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து சீயான் 60 படத்தில் நடிக்க ஆரம்பித்தார் விக்ரம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் ஜூலையில் ‘சீயான் 60’ படத்தைத் தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளார் விக்ரம். ஒரே கட்டமாக சீயான் 60 படத்தை முடித்துவிட அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம் விக்ரம்.

இதன்பின் கோப்ரா படத்தின் படப்பிடிப்பை தொடங்க, விக்ரம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here