ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் தயாராகி வெளியாகி இருந்த படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தில் ஜீவா-சந்தானத்தின் காமெடி பெரிய ஹிட்டடித்தது.

இதில் ஜீவா ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என்ற டயலாக் ரசிகர்களிடம் அதிக ரீச், அவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் வசனத்தை பேச சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அவரும் சலிக்காமல் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரு குவாட்டர் சொல்லிவிடுவார். இந்த படத்தின் 2ம் பாகம் என்ற பேச்சு எல்லாம் அடிபட்டது, ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் இல்லை.

இந்த படத்தில் ஒரு அடங்காப்பிடாரி என்ற பாடல் வரும், அதில் இடையில் ஜீவா, ரஜினி குரலில் பேசும் வசனம் ஒன்று வரும். அந்த வசனத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் பேசியுள்ளார்.

அந்த தகவலை அவரே ஒரு விழா மேடையில் கூறியிருக்கும் வீடியோ இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here