தமிழ் சீரியல் பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு ஜோடி சஞ்சீவ்- ஆல்யா மானசா. இவர்கள் விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தார்கள்.
அந்த சீரியல் மூலம் பழக்கம் ஏற்பட இருவரும் காதலித்து வந்தார்கள். இவர்களின் காதலுக்கு நடிகை ஆல்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதனால் இவர்கள் ஒருவரையொருவர் பிரிந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் திடீரென யாருக்கும் கூறாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து நடிகர் சஞ்சீவ் ஒரு வீடியோவில், ஆல்யா பிறந்தநாள் அன்று சர்ப்பரைஸாக ஈசிஆர் உள்ள கோவிலுக்கு அழைத்து போய் தாலி கட்டியதாகவும, திருமணம் செய்துகொண்ட பிறகு ஆல்யா வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
ஆல்யா பேசும்போது, சஞ்சீவை மிஸ் செய்துவிட கூடாது என உறுதியாக இருந்தேன், திருமணத்திற்கு பிறகு தான் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார்.