தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் அஜித், தன்னுடன் இணைந்த நடித்து வந்த, நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா குமார், மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை அறிவோம்.
நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.
இதில் ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழில் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.
மேலும் ஷாலினி அண்ணன், ரிச்சர்ட் கடந்த ஆண்டு திரௌபதி எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஷாலினி, ஷாமிலி, ரிச்சர்ட் மூவரும் இணைந்து சமீபத்தில் அழகிய புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..