திரையுலகில் பெரிய அளவில் படம் நடிக்கவில்லை என்றாலும், அர்ஜுன் ரெட்டி எனும் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே.

அதுவும் இப்படத்துக்கு பிறகு இவருக்கு அனைத்து மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் வெளியான கொரில்லா, 100% காதல், நிசப்தம் உள்ளிட்ட படங்களில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து, இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள், பெரிதளவில் வைரலானது.

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகரான அமீர்கான் மகன் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க, ஷாலினி பாண்டே கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் டெக்னீசியன் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here