தமிழில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனுஷா.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சானுஷா, தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
அப்படி சில மாதங்களுக்கு முன் இவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இவரை உருவ கேலி செய்தனர்.
இந்நிலையில் தனது உடல் எடையை வைத்து உருவ கேலி செய்தவர்களுக்கு தற்போது நடிகை சனுஷா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இது அவர் குறிப்பிட்டுள்ளது :
” யாரெல்லாம் என் உடல் எடையை பற்றி என்னைவிட அதிகமாக கவலைப்படுகிறார்களோ அதைக்குறித்து பேசுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்னை சுட்டி காட்டி பேசும் எல்லோரும் ஒன்றை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒருவரை உங்களின் இரு விரல்களால் சுட்டிக்காட்டும்போது மீதமுள்ள மூன்று விரல்களும் உங்களை சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சரி செய்து கொள்ளுங்கள் ” என தெரிவித்துள்ளார்.