தல அஜித் மற்றும் எச். வினோத் கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.
மேலும் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது, ஆம் ஹைதெராபாத் ராமோஜி ராவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது.
அப்போது தல அஜித் தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து தினமும் சைக்கிளில் தான் ஷூட்டிங்கிற்கு வந்து செல்வாராம்.
மேலும் இப்படத்தில் வில்லனாக இளம் நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் சிக்ஸ் பேக் உடன் கடும் டயட்டில் நடித்து கொடுத்துள்ளாராம்.
அவரின் இந்த அர்ப்பணிப்பை கண்டு வியந்த அஜித் கடைசி நாள் படப்பிடிப்பில், “இன்னிக்கு நீங்க உங்க டயட்டை கைவிட்டே ஆகணும்’’ எனச் சொல்லி பிரியாணி ட்ரீட் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.