நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர்.

தனது படங்களில் ரசிகர்களை கெடுக்கும் வண்ணம் எந்த விஷயமும் இருக்க கூடாது என பார்த்து பார்த்து படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஒரு கிராமத்து கதை படம் என்றால் மற்றொன்றும் நகர் புரங்களில் வலம் வரும் கதைகளாக மாற்றி மாற்றி நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில்  ஹீரோ படம் வெளியாகி இருந்தது.

அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்திருப்பது டாக்டர் திரைப்படம் தான்.

இந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்து 5 புதிய படங்கள் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தொடர்ந்து 5 படங்கள் நடித்து கொடுக்கப்போகிறாராம்.

ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி என 5 படங்களுக்கு மொத்தமாக ரூ. 75 கோடி சம்பளம் பெற இருக்கிறாராம். இனி தான் அந்த 5 படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் யார் யார் என்ற கதை வேட்டை நடக்க உள்ளதாம்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here