கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவருக்கு மகளாக நடித்துவருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கவுள்ளது. தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுடன் வே ட் டை யாடு விளையாடு 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிதுள்ளாராம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.
இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் இந்தியன்2 படத்தை கைவசம் வைத்துள்ளார்.