நடிகை சித்ராவின் மரண விவகாரம் தொடர்பில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்த முக்கிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி நடிகை சித்ராவின் தொலைப்பேசியில் அழிக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவுகளின் அடிப்படையில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தால் தினமும் கேவலமான சொற்களால் தன் மனதை காயப்படுத்தி வந்த ஹேம்நாத்தின் நடவடிக்கை குறித்து அவரது தந்தையிடம் சித்ரா கூறி உள்ளார். அவர் தற்கொலை செய்த பின் சித்ராவின் தொலைப்பேசியில் இருந்த தகவல்களை ஹேம்நாத் அழித்துள்ளார்.
இதையடுத்து சைபர் கிரைம் பொலிஸாரின் உதவியுடன் குறித்த தகவல்கள் மீளப் பெறப்பட்டுள்ள நிலையில், ஹேம்நாத் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.