தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார்.

உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தவசி முத்திரை பதித்திருந்தார்.

கம்பீரத் தோற்றத்துடன் இருந்த அவர், உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்று நோயின் தாக்கத்தால் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்தார்.

அவரது துயர நிலை குறித்து அண்மையில் காணொளி வெளியிட்டு நிதி உதவி கோரியிருந்துடன் அதனைப் பார்த்து நடிகர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, சிகிச்சைக்காக நிதி உதவியும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, தவசி உயிரிழந்து விட்டதாக மதுரை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here