பிக் பாஸ் நிகழ்ச்சி இம்முறை முறை பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே சுரேஷ் மற்றும் அனிதா இடையே  சிறு மோதல் ஏற்பட்டது. இது ரசிகர்களிடையே வெகுவாக பேசப்பட்டது. ஆனால் தற்போது அவர்கள் இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்வதாக பிக்பாஸ் காட்டவில்லை. செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் அனிதா. அவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது கணவர் பிரபாகரன் தனது மனைவியின் தற்காலிக பிரிவைப் பற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “இன்றுடன் 30 நாள் ஆகிறது.  நாங்கள் காதலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, இத்தனை வருடங்களில் இவ்வளவு நாள் நாங்கள் பார்த்து கொள்ளாமல் இருந்ததே இல்லை. முதல் முறையாக எனக்கே இது மிகவும் புதுசாக இருக்கிறது. நான் எனது செல்லம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here