தொகுப்பாளினி டிடி கடந்த வருடங்களில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கேமரா பக்கம் அவ்வளவாக வரவில்லை.
இப்போது உடல்நிலை சரியானதும் படங்கள் கமிட்டாவது, புதிய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் டுவிட்டர் இந்தியா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கூட நடிகர் கமல்ஹாசனை பேட்டி எடுத்திருந்தார்.
தற்போது டிடி தொகுப்பாளினி வேலையை தாண்டி இப்போது அதிக பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு வருகிறார். மணப்பெண் கோலத்தில் ஒரு பேஷன் ஷோவில் கலந்துகொண்ட டிடி இப்போது மற்றொரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.