பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஆர்யாவுக்காக பெண் தேடும் வேலையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

16 பெண்களில் இறுதியாக 3 பெண்கள் தான் இருந்தனர். அவர்களில் இருந்து ஆர்யா ஒருவரை தேர்வு செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் பலரும் எதிர்ப்பார்த்தது போல் ஆர்யா அவர்களில் இருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை.

இதனால் ரசிகர்கள் பலரும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து முதன்முதலாக பேசியுள்ளார் இலங்கை பெண் சுசானா. முதலில் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்தேன் இப்போது உங்களுடைய அன்பை பெற்றிருக்கிறேன். 3 மாதம் நான் கொடுத்த உழைப்பு, நேரம் எல்லாம் வீண். ஆனால் இதிலிருந்து வெளிவந்த அடுத்த வேலையை பார்ப்பது நல்லது, உங்களுடைய அன்புக்கு நன்றி என இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here