நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இஷான் கட்டர் ஜோடியாக தடக் படத்தில் அவர் ஹீரோயினாக அவர் அறிமுகமாகிறார்.

அவர்கள் இருவரும் ஒன்றாகவே பல இடங்களில் சுற்றிவந்தனர் என்பதால் அவர்கள் காதலித்து வருவதாகவும் பல வருடங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஜான்வி-இஷான் இருவரும் ஒன்றாக வரும்போது பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். அதனால் ஜான்வி உடனே தான் வந்த வழியை மாற்றி மீண்டும் காருக்கு சென்று சிறிது நேரம் கழித்து வந்தார். இஷானும் முகத்தை மறைத்தபடியே அங்கிருந்து நடந்துசென்றார்.

இத்தனைநாட்கள் பத்திரிகையாளர்களை கண்டால் சகஜமாகவே ரியாக்ட் செய்த அவர்கள் தற்போது மட்டும் ஏன் இப்படி பயந்து ஓடினார்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here