விஜய்-முருகதாஸ் கூட்டணி என்றாலே கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துவிடுகின்றனர் ரசிகர்கள்.

இவர்களது கூட்டணியில் இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் கொடுத்த ஹிட் இதற்கு காரணம் என்று கூறலாம். விஜய்யின் இந்த 62வது படமும் சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பற்றி தான் பேசுகிறது என்று படக்குழு தரப்பில் இருந்து சிறு சிறு தகவல்கள் வருகின்றன.

இந்த நேரத்தில் ஸ்ட்ரைக் முடிந்து அடுத்தகட்டமாக படக்குழு படப்பிடிப்பை அடுத்த வாரத்தில் தொடங்க இருக்கிறார்களாம். இதில் சில சண்டை காட்சிகள், 2 பாடல்களை படமாக்க பிளான் செய்துள்ளனர்.

அதோடு படத்தின் ஃபஸ்ட் லுக் தகவல்கள் விரைவில் வெளியாகிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here