சமூக வலைத்தளம் மூலம் தான் திருமணம் செய்ய போவதாக அறிவித்த ஆர்யா, கடந்த பிப்ரவரியில் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய `கலர்ஸ் தமிழ்’ சேனல். அதில் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷோ, `எங்க வீட்டு மாப்பிள்ளை. நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என அறிவித்தார். இந்த ஷோவில் கலந்து கொள்ள பல பெண்கள் போட்டிபோட பதிவு செய்தனர்.
அதில் 16 பெண்களை தேர்வு செய்தனர். ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று இறுதிபோட்டி நடைபெற்றது. இதில் இறுதிவரை இருந்த மூன்று போட்டியாளர்களான சுசானா, அகாதா, சீதாலட்சுமி ஆகிய பெண்களிடம் அதிக எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இறுதி போட்டியில் யார் என்னை திருமணம் செய்ய போவது என்று பேசிய நடிகர் ஆர்யா,
“என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். நிகழ்ச்சியில், அவர்கள் யாரையுமே நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால், என்னுடைய திருமணம் குறித்து கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே முடிவை சொல்லுகிறேன்”
என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் நிறையவைத்து பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதியை நடிகை சங்கீதா ஆர்யாவின் முடிவு பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
”இப்பவும் நான் உன்னை திருமணம் செய்ய தாயாராக தான் இருக்கிறேன்” என கூறி இன்னும் நிகழ்ச்சிக்கு சூடுபிடிக்க வைத்தார்.
இந்நிலையில், பார்வையாளர்களாக வந்த தொகுப்பாளினி சித்ரா, உட்பட பலரும் ஆர்யாவை கேள்விகளால் தாக்கி கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளனர்.