நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று சினேகா-பிரசன்னா ஜோடி ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிரசன்னா, “சினேகா மட்டுமில்லை நான் அனைத்து பெண்களையும் அதிகம் மதிக்கிறேன். குழந்தை பெற்றெடுக்கும் போது அவர்கள் படும் வலியை நேரில் பார்த்ததால் தான். சினேகா பிரசவத்தின் போது நார்மல் டெலிவரி ஆகவில்லை, அதனால் வலியை அதிகரிக்க ஒரு இன்ஜெக்ஷன் போட்டார்கள். அதை பார்த்ததும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.. அவ்வளவு பெரிய நீடில்.

சும்மா தலைவலி வந்தாலே தாங்க முடியாது, ஆனால் இந்த வலியை ஒவ்வொரு அம்மாவும் எப்படி தாங்கினார்கள் என நினைத்தால் அவர்களை தெய்வமாக மதிப்போம்” என கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here